தமிழக அரசியல் களத்தில் இருபெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒரு பக்கம் இருக்க, மூன்றாவதாக தேமுதிக என்கிற கட்சி உருவெடுத்துள்ளது, இந்த கட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் மற்ற கட்சிகளுக்கு தலைவலியாகவே உள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியின் வாக்குகள் எதிர்கட்சிக்கு கிடைக்காமல் அதிமுக களத்தில் தத்தளிக்கிறது, இந்த சந்தர்ப்பத்தை திமுக நன்றாக பயன்படுதிகொள்கிறது. தேமுக ஆரம்பிக்கபட்டவுடன், இந்த கட்சி, டி.ராஜேந்தர் கட்சியை போலவும், நடிகர் கார்த்திக் கட்சியை போலவும் தான் வாக்குக்களை வாங்கும் என்று திமுகவும், அதிமுகவும் கணக்கு போட்டார்கள், ஆனால் அந்த கணக்கோ தவறாக போயிற்று. பொதுவாக ஆளும் கட்சியின் வாக்குகள் தான் எதிர் கட்சிக்கு சென்று வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும், ஜெயலலிதா ஆட்சியின் போது தான் தேமுதிக ஆரம்பித்து ஆளும் கட்சியின் வாக்குக்களை பிரித்து எதிர்கட்சியான திமுகவுக்கு சாதகமாக அமைந்தது. இவ்வாறு இருக்க, இவரை வைத்து தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் பேசிப்பார்த்தனர், ஆனால் அவரோ முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியதை போல ஏறிக்கொண்டார்.... எல்லா பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்திகளும் அதிமுக 35 இடங்களை கைப்பற்றும் என்று கணித்து ஆனால் நிலைமையோ தலைகீழாக திமுக 18 இடங்களில் வெற்றிபெற்றது, அதற்கும் விஜயகாந்த் தான் காரணம். அதிமுக தரப்பில் இன்னொரு குற்றச்சாட்டு பலமாக முன்வைக்க பட்டது, இரட்டை இலை பொத்தானை அழுத்தினால் உதய சூரியன் விளக்கு எறிந்ததாக சொன்னார், ஆனால் அதை திமுக வினர் கேலி செய்தனர், கொஞ்ச நாட்கள் பிறகு ஹைதராபாத் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மின்னணு இயந்திரத்தில் தவறு செய்ய இயலும் என்று நிரூபித்தவுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டார், இதை அறிந்த எதிர்க்கட்சியாகிய பா.ஜ.க சந்தேகம் உறுதியானது. மின்னணு இயந்திரம் இருக்கும் காரணத்தால் கருணாநிதி ஆட்சி மாறாது என்ற உத்திரவாதத்தை கொடுக்கிறார். எதிர்கட்சியை சேர்ந்த உறுபினர்களை விலைக்கு வாங்கி கட்சியை செல்லா காசாக மாற்ற வேண்டி கோடி கோடியாக பணம் செலவழித்து எதிர்கட்சியினரை விலைக்கு வாங்கினார், ஏன்? நாம் இருக்கும் போதே நாம் நம் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து விடவேண்டும், ஜெயலலிதா வந்தால் நம்மை சும்மா விடமாட்டார் என்ற பயம். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது போல, ஜெயலலிதா வந்தால் தா.கிருட்டிணன் வழக்கையும், தினக்கரன் அலுவலக ஊழியர் எரிப்பு வழக்கையும் தூசு தட்டப்படும் என்கிற காரணத்தாலும், தாம் இந்த நான்கு வருடத்தில் கொள்ளையடித்த பணம் முழுவதும் பறிபோய் விடும் என்கிற காரணத்தாலும் இந்த முறை எதாயவது செய்து வெற்றி பெற முயல்வார்.
கருணாநிதி கொள்ளையடிக்கவே இந்த நான்கு வருடமாக கவனம் செலுத்திவருகிறார், தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, ஆனால் இலவசம் மட்டும் பஞ்சம் இல்லை. ஒரு காலத்தில் இலவசத்தின் மீது இருந்த மோகம் இப்போது குறைந்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.
நானூறு கோடி ரூபாயில் செம்மொழி மாநாடு நடத்தி கொங்கு கோட்டையை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று நடத்தினார்கள், செம்மொழி மாநாடு முடிந்த பிறகு கருணாநிதி அப்பாடா கொங்கு கோட்டை நாம் பக்கம் திரும்பிவிட்டது என்று பேரு மூச்சு விட்டார், அது வரை மக்கள் மனதில் அதிமுக அழிந்துவிட்டது என்ற மாயையை உருவாக்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்தனர், ஒரு வருடமாக திட்டமிட்டு நடத்தி, அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து, காசு, பிரியாணி பொட்டலம் கொடுத்து கூட்டிய கூட்டத்தை விட, இரண்டு மணி நேரத்தில் அதிமுக கோவையில் கூட்டத்தை கூட்டியது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
கருணாநிதிக்கு பயம் வந்து, ஜெயலலிதா வழியில் அவரும் செல்ல ஆரம்பித்துவிட்டார், அதன் விளைவு தான் போட்டி கூட்டம் கோவையிலும், திருச்சியிலும், அப்படியும் கூட்டம் சேரவில்லை. அரசு பேருந்துகளை வைத்து கூட்டிய கூட்டத்தை விட ஜெயலலிதாவுக்கு கூட்டம் கூடுகிறதே என்ற ஒரு பயம்.... ஆனால் வரும் தேர்தலில் காகித வாக்களிப்பு முறை தான் பயன்படுத்தப்படும் என்று கருணாநிதிக்கு தெரிந்துவிட்டது, அதன் விளைவாக தான் தினம் ஒரு அறிக்கைகள், கவர்ச்சி அறிவுப்புகள்... வரும் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்கபடுவது ஜெயலலிதா அமைக்க போகும் கூட்டணியில் தான் இருக்கிறது. எது எப்படியோ இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பீகாரை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment